ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் உக்ரைன் தலைநகர் கியேவுக்கு போலந்தில் இருந்து தொடருந்து மூலம் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட மூன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களது தைரியத்தை உக்ரைன் பாராட்டியுள்ளது.
போலந்து, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசின் பிரதமர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கியேவ் நகரில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கியை சந்தித்தனர்.
இதன்போது உக்ரைனியர்கள் தனியாக இல்லை என்று செக் தலைவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர் மேற்கத்திய தலைவர்கள் உக்ரைனுக்கு பயணித்திருப்பது இது முதல் முறையாகும்.