பிரான்சில் இன்று அதிகாலை முதல் சஹாரா புழுதி மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
129

பிரான்சின் பல பகுதிகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நண்பகல் வரை ஒருவகை தூசு கலந்த மழை பொழிந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மழையின் போது வீதிகள் தெளிவற்று தூசிப் படலத்தால் மூடியிருந்ததாகவும் –

நிறுத்திவைக்கப் பட்டிருந்த வாகனங்களின் மேல் தூசிப்படலம் படிந்துள்ளதாகவும் – பலரும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பிரான்ஸின் பல பிராந்தியங்களில் இன்று காலை வானம் ஆபிரிக்காவின் சஹாரா பாலைவன வர்ணத்தில் காட்சி
யளித்தது.

காற்றோடு கலந்து வருகின்ற சஹாரா
புழுதி ஸ்பெயின் நாட்டைக் கடந்து பிரா
ன்ஸிலும் பரவியுள்ளது. காலத்துக்குக்
காலம் அவ்வப்போது உருவாகின்ற இந்த அதிசயக் காலநிலை நிகழ்வு இன்று தீவி
ரமடைந்துள்ளது.

Dordogne , Hautes-Pyrénées , Creuse , Franche-Comté , Gironde , Isère , Lorraine, Loire-Atlantique பகுதிகளில் பாலைவனப்
புழுதி அதிகளவில் பரவியுள்ளது.தங்கள் பகுதிகளில் வானம் செம்மஞ்சள் நிறத்
தில் தோன்றும் காட்சிகளையும் வாகனங்
கள் மற்றும் இடங்களில் புழுதி படிந்து
கிடப்பதையும் காட்சிகளாகப் பலரும்
சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வரு
கின்றனர்.புழுதி பரவிய இடங்களில் மழைப் பொழிவும் ஏற்பட்டுள்ளது. புழுதி
மழை பொழிகின்ற காட்சிகளும் ஊடகங்
களில் வெளியாகியுள்ளன.

பாலைவன மணல் புழுதி தொடர்ந்து
வியாழக்கிழமை வரை நீடிக்கும் என்று
காலநிலை அவதான நிலையம் தெரி
வித்துள்ளது.அதிகமாக வளி மாசடைந்
துள்ள பகுதிகளில் வசிப்போர் வீடுகளின்
ஜன்னல்களை மூடிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
15-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here