பொருளாதார நெருக்கடிக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் பின்லாந்துக்கு!

0
196

உக்ரைன் மீதான போர் ஆரம்பித்த பிறகு
ரஷ்யாவில் இருந்து வெளியேறுவோரது
எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து
வருகிறது.தினமும் பல நூற்றுக் கணக்
கான ரஷ்யர்கள் தரைவழியாகப் பின்
லாந்து நாட்டுக்குள் படையெடுத்துள்ள
னர் என்பதை அங்குள்ள குடிவரவு அதி
காரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

பின்லாந்தும் ஏனைய ஐரோப்பிய நாடு
களும் ரஷ்யாவுக்கான வான் போக்குவ
ரத்துகளை முற்றாகத் துண்டித்துள்ளன.
அதனால் நாட்டை விட்டு மேற்கு நோக்கி
இடம்பெயர விரும்புகின்ற ரஷ்யர்கள்
முதலில் தரைவழியாகப் பின்லாந்துக்
குள் சென்றே அங்கிருந்து மூன்றாவது நாடுகளுக்குச் செல்ல முடிகிறது.

ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க் (St Petersburg) – பின்லாந்தின் ஹெல்சிங்கி (Helsinki) ஆகிய நகரங்களை இணைக்
கின்ற அலெக்ரோ ரயில் சேவை(Allegro train) கடந்த சில நாட்களாக பயணிகள்
முன்பதிவால் நிறைந்துள்ளது என்று
அதன் நிர்வாகம் கூறுகிறது. ரஷ்யாவில்
தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் மேற்
குலகின் பொருளாதாரத் தடைகளால்
நாட்டின் தேசிய பொருளாதாரம் நெருக்
கடிக்குள் சிக்குவது கண்டு அஞ்சுகின்ற
ரஷ்யர்களும் மேற்கலகிற்கான ஒரே வழியாகிய பின்லாந்து ரயில் மூலமாக
வெளியேறிவருகின்றனர்.

மேற்குலகத் தடைகள் ரஷ்யர்களது நாளா
ந்த வாழ்வை நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. அதேசமயம் உள்நாட்டில்
மக்கள் கொந்தளிப்புகளை ஒடுக்குவதற்
காக அதிபர் புடின் இராணுவச் சட்டத்தை
பிரகடனப்படுத்தக் கூடும் என்ற அச்சமும்
அங்கு எழுந்துள்ளது.

பின்லாந்து வரலாற்று ரீதியாக ரஷ்யாவு
டன் போர்களைச் சந்தித்து விடுதலை
பெற்ற நாடாகும். சுவிடிஷ் பேரரசின் ஒரு
பகுதியாக இருந்த காலம் தொட்டு கடந்த
நான்கு நூற்றாண்டுகளில் அது தனது கிழக்கு எல்லையில் அமைந்துள்ள ரஷ்
யாவுடன் டசின் கணக்கான மோதல்க
ளில் ஈடுபட்டுள்ளது.1939-40 மற்றும் 1941-44 காலப்பகுதியில் சோவியத் ஒன்
றியத்துடன் அது போர்களைச் சந்தித்துள்
ளது.ஆயினும் அதன் பிறகு பின்லாந்து மேற்கிற்கும் கிழக்குக்கும் இடையே எந்தப்பக்கமும் சாராமல் நடுநிலை வகித்து வந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை
அடுத்து சுமார் 5.53 மில்லியன் மக்கள் வாழும் பின்லாந்து தேசத்தவர்களிடையே (அவர்களில் அரைப் பங்கினர் ரஷ்யக் குடிமக்கள்) நேட்டோவில் இணைவதற்
கான ஆதரவு அதிகரித்துவருகிறது. நோர்டிக் நாடான பின்லாந்து ரஷ்யாவு
டன் ஆயிரத்து 300 கிலோ மீற்றர் நீளமான
எல்லையைக் கொண்டுள்ள நாடு என்பது
குறிப்பிடத்தக்கது.

படம் :அலெக்ரோ ரயில் சேவை (Allegro train) பயணிகள்.

         -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                            14-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here