எரிபொருள் லீற்றருக்கு 15 சதத்தை ஏப்ரல் முதல் அரசு பொறுப்பேற்கும்!

0
158

🔵பணவீக்கப் பாதிப்பை ஈடுசெய்ய
திட்டங்கள் அடுத்த வாரம் அறிவிப்பு

🔵80 வயதுக்கு மேற்பட்டோருக்கு
நான்காவது தடுப்பூசி தொடக்கம்

🔴தாயும் நான்கு பிள்ளைகளும்
வீட்டினுள் சடலங்களாக மீட்பு!

குடும்ப வன்முறைகளில் குழந்தைகள்
கொல்லப்படுவது தொடர்கிறது. பிரான்
ஸின் தென்கிழக்குப் பிராந்தியத்தில்
(Auvergne-Rhône-Alpes) கிரெனோபிள் (Grenoble) என்ற இடத்தில் மாடிக்குடியி
ருப்பு ஒன்றில் இருந்து நான்கு சிறு
பிள்ளைகள் உட்பட ஐவரது உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன.

39 வயதான தாய் மற்றும் 3,8,10,12 வயது
களையுடைய பிள்ளைகளின் சடலங்களே
பழுதடைந்த நிலையில் அவசர மீட்புக்கு
ழுவினரால் வெள்ளிக்கிழமை இரவு கண்
டுபிடிக்கப்பட்டன. தொலைவில் வசிக்கும்
உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மீட்புப் பிரிவினர்
வீட்டின் கதவை உடைத்துச் சடலங்களை
மீட்டனர்.உடல்கள் பழுதடைந்த நிலை
யில் கிடந்ததால் மரணங்கள் நிகழ்ந்து
குறைந்தது 15 நாள்களாவது கடந்திருக்
கலாம் என்று விசாரணையாளர்கள் நம்
புகின்றனர்.

நான்கு பிள்ளைகளும் மிக ஆபத்தான
நச்சு மருந்து ஊட்டிக் கொல்லப்பட்டுள்
ளனர் என்பதை பூர்வாங்க சோதனைகள்
உறுதிப்படுத்தியுள்ளன. பிள்ளைகளைக்
கொன்றுவிட்டு அந்தப் பெண் தன்னுயி
ரை மாய்த்துக்கொண்டிருக்கவேண்டும்
என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணின் கணவரும் பிள்ளைகளின்
தந்தையுமாகிய ஆண் ஒருவர் சில நாட்
களுக்கு முன்பாகவே குடும்ப வன்முறை
குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்
பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்
ளது. பிரேத பரிசோதனை மற்றும் மரண
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்
கப்பட்டுவருகின்றன.

*எரிபொருள் கட்டணம் குறைப்பு

உக்ரைன் போரினால் எரிபொருள்களது
விலை லீற்றர் இரண்டு ஈரோக்களைத்
தாண்டி உயர்ந்து செல்கிறது. அதனைக்
குறைக்கும் ஒரு நடவடிக்கையாக லீற்
றர் ஒன்றுக்கு 15 சதத்தை அரசு பொறுப்
பேற்கவுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி
தொடக்கம் நான்கு மாத காலத்துக்கு
இந்த விலைக் கழிவுடன் சகல எரிபொ
ருள்களையும் நிரப்பிக்கொள்ள முடியும் என்று பிரதமர் ஜீன் காஸ்ரோ பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பாவனையாளர்கள் எரிபொருள் நிரப்பு
நிலையங்களில் பணம் செலுத்தும் சமய
த்திலேயே விலைக் கழிவு வழங்கப்படும்.
கழிவுத் தொகையை அரசு பின்னர் எரி
பொருள் நிலையங்களுக்கு வழங்கும்.
60 லீற்றர்கள் நிரப்பிக் கொள்ளும் ஒருவர்
இதன் மூலம் 9ஈரோக்கள் விலைக் கழி
வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று
பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை உக்ரைன் போரினால் ஏற்
பட்டிருக்கின்ற ஏற்றுமதி, இறக்குமதித்
தடைகளால் பாதிக்கப்பட்ட தொழில்
துறைகள், நிறுவனங்கள் மற்றும் பண
வீக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
போன்றோருக்கு உதவி வழங்கும் திட்டங்
களை அடுத்த வாரம் அரசு அறிவிக்கவுள்
ளது. பகுதிநேர வேலை இழப்பு ஊதியம்
பணவீக்கக் கொடுப்பனவு போன்ற உதவிகள் அந்தத் திட்டத்தில் (un plan de résilience” économique et social face aux conséquences de la guerre) அடங்கியிருக்
கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🔸வைரஸ் தொற்று அதிகரிப்பு :

மாஸ்க் அணிதல், தடுப்பூசிப் பாஸ் உட்பட அநேகமாக எல்லா சுகாதாரக் கட்டுப்பாடு
களும் திங்கட்கிழமை முதல் நீக்கப்பட
வுள்ள நிலையில் நாட்டில் தினசரி தொற்
றாளர்களது எண்ணிக்கை கடந்த வாரம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.

தடுப்பூசி பாஸ் நீக்கப்பட்டாலும் தடுப்பூசி
ஏற்றும் திட்டங்கள் தொடர்ந்து முன்னெ
டுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தி
ருக்கிறார். பலவீனமானவர்கள், நோயா
ளிகள்,உட்பட எண்பது வயதுக்கு மேற்
பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி
செலுத்துவது உடனடியாக ஆரம்பிக்கப்
படுகிறது என்றும் பிரதமர் அறிவித்துள்
ளார்.

(படம் :ஐவரின் உடல்கள் மீட்கப்பட்ட குடியிருப்புக் கட்டடம்.)

குமாரதாஸன். பாரிஸ்.
12-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here