பிரான்சில் தமிழ்மக்களால் பொண்டி மாநகர முதல்வர் மதிப்பளிப்பு!

0
380

பாரிசின் புறநகர் பகுதியும் 93 மாவட்டத்தில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடமான பொண்டி மாநகரத்தின் முதல்வர் மதிப்புக்குரிய. Stephen Hérve அவர்களும், அவரின் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ்ச்சோலை மாணவி செல்வி. பிறேமினி பிரபாகரன் அவர்களும் மற்றும் மாநகர முக்கியமானவர்கள் பொண்டி பிராங்கோ தமிழ்சங்கத்தால் மாணவர்கள், பெற்றோர்களால் 12.03.2022 சனிக்கிழமை தமிழ்ச்சோலை மண்டபத்தில் மதிப்பளிப்பு செய்யப்பட்டனர்.

இம் மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தில் இயங்கும் தமிழ்ச்சோலையில் 200 வரையிலான மாணவர்கள் தாய் மொழியாம் தமிழ், நடனம், ஏனைய பாடங்களும் கற்று வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் அனைத்து ரீதியிலான தேவைகள் கடந்த காலங்களில் மாநகரத்தினால் நிறைவேற்றப்பட்டு வந்ததையும் தொடர்ந்து அவற்றை தமிழ்மக்கள் முன்னெடுக்க முதல் கைகொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தனர். தான் தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல், சமூகம், கலை விளையாட்டு அத்தனைதேவைகளையும் பூர்த்திசெய்வேன் என்றும் தனக்கு உறுதுணையாக செல்வி. பிறேமியும் மற்றும் ஏனையவர்களும் இருப்பார்கள் என்றும் முதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மலர் கொத்து,பொன்னாடைகள் சங்கத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்களால் விருந்தினர்களுக்கு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம், மற்றும் தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பு அரசியல் பிரிவு, பொண்டி தமிழ்ச்சோலை இளையவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here