பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 இன் 2 ஆம் நாள் போட்டிகள். (13.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 -மணிக்கு – 8 Avenue du Stade 95200 Sarcelles மைதானத்தில் நடைபெற்றது. மாவீரர் நினைவாக ஈகைச்சுடரினை 2 ஆம் லெப். இழந்தேவன் அவர்களின் சகோதரரும், சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவருமாகிய திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இன்றையபோட்டிகளில் பங்குபற்றி சிறப்பித்த கழகங்கள்.
விண்மீன்கள் எதிர் அராலி சில்வஸ்ரார்
St Mary’s எதிர் C.S.T 93
Fc 93 blanc எதிர் யாழ்டன் வி.கழகம்
அராலி அண்ணா வி. கழகம் எதிர் நல்லூர்ஸ்தான் வி.கழகம்.
இதில் 8 கழகங்கள் இன்று பங்குபற்றிச் சிறப்பித்தன.