போர் தொடங்கி 12 நாட்களுக்குள் போர்க் குற்ற விசாரணை ஆரம்பம்!

0
206

ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள
போருடன் தொடர்புடைய குற்றங்கள்
தொடர்பாக சர்வதேச விசாரணைகள்
மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்
(International Criminal Court -ICC)தலைமை வழக்கறிஞர், போர் குற்றங்கள் தொடர்
பாக ரஷ்ய அதிபர் புடின் மீது விசாரணை
கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவித்திருக்கிறார். ஜேர்மனியிலும் உக்ரைன் போர் குற்றங்கள் தொடர்பில் தனியான விசாரணை ஒன்று ஆரம்பிக்
கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் 2014 முதல் ரஷ்யா புரிந்து
வந்த போர் தொடர்பாகவும் தற்சமயம்
இடம்பெறுவதாக நம்பப்படுகின்ற புதிய
போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்
துக்கு எதிரான குற்றங்களை உள்ளடக்
கியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படு
வதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்
தின் தலைமை வழக்கறிஞர் கரீம் ஹான் (Karim Khan) தெரிவித்திருக்கிறார்.

விசாரணைகள் எவ்வளவு கதியில் முன்
னெடுக்கப்பட்டாலும் புடினை சர்வதேச
நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்
துவது சாத்தியமா என்ற முக்கிய கேள்வி
இதில் உள்ளது. சாத்தியமான போர்க்
குற்றங்களை அடையாளம் காண்பது
உட்பட மேலும் பல சட்டச் சிக்கல்கள்
தாண்டப்பட்ட பிறகே அனைத்துலக
விசாரணை என்பது முன்னோக்கி நகர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்ற
னர்.

உக்ரைனின் மரியுபோல் நகரில் மகப்
பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனை
ஒன்று சில தினங்களுக்கு முன்பு தாக்கப்
பட்டுள்ளது. சிறுவர் உட்பட சிவிலியன்
உயிரிழப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு
ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் போர்க்
குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்தத் தாக்
குதல் தொடர்பான செய்திகளுக்கு மேற்
குலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம்
அளித்து செய்திகளை வெளியிட்டு வரு
கின்றன.

இந்தத் தாக்குதலையும் இதுபோன்ற
சிவிலியன்கள் மீதான வேறு சில குண்டு
வீச்சுச் சம்பவங்களையும் தடைசெய்யப்
பட்ட ஆயுதங்களது பாவனையையும் போர்க்குற்றங்களாகக் கருதத்தக்கவை
யா என்பதை உறுதிப்படுத்தும் முயற்சி
களில் சட்ட நிபுணர்கள் ஈடுபட்டுவருகின்
றனர். ஐசிசி என்கின்ற சர்வதேச குற்ற
வியல் நீதிமன்றத்தின் 123 உறுப்பு நாடு
களில் 39 நாடுகள் உக்ரைன் போர்க் குற்
றங்கள் குறித்து உடனடி விசாரணை
யைத் தொடக்குமாறு கூட்டாகக் கேட்டுள்
ளன.

இதேவேளை, ஜேர்மனியின் சமஷ்டி சட்ட
வாளர் அலுவலகமும்(federal prosecutor)
ரஷ்யா மீதான போர் குற்றங்கள் சார்ந்த
விசாரணைகளைத் தொடக்கியுள்ளது
என்ற தகவலை அந்நாட்டின் நீதி அமைச்
சர் வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையி
லான ஆயுத மோதலில் சர்வதேச சட்டங்
களை மீறுகின்ற வகையில் குற்றங்கள்
இடம்பெறுகின்றனவா என்பதை அறிவ
தற்கான கட்டமைப்பு விசாரணை (struc
tural investigation) ஒன்றை சமஷ்டி சட்ட
வாளர் ஆரம்பித்திருக்கிறார் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
11-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here