பாரிஸ் வேர்சாய் அரண்மனையில் 27 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் கூடும் விசேட போர்க்கால மாநாடு!

0
115

சுற்றிவர காவல்துறையினர் கடுங்காவல்!

பாரிஸின் புறநகரில் உல்லாசப்பயணி
களது தலமாக விளங்கும் château de Versailles என்கின்ற வேர்சாய் அரண்
மனையைச் சூழ கடும் கட்டுக்காவல்
போடப்பட்டிருக்கிறது. அரண்மனை
உல்லாசப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்
ளது. சுற்றாடல் வீதிகளில் போக்குவரத்
துக்கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்
ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளது
தலைவர்கள், உக்ரைன் போர் ஏற்படுத்
தியுள்ள பொருளாதார, பாதுகாப்பு, எரி
சக்தி நெருக்கடிகளுக்கு கூட்டாக முகம் கொடுப்பது எப்படி என்பதற்கான உத்தி
களை வகுப்பதற்காக அரண்மனையில் கூடுகின்றனர்.அதனை முன்னிட்டே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள
ளது.

மாநாட்டு செய்திகளைச் சேகரிப்பதற்காக
உலகெங்கும் இருந்து சுமார் 700 செய்தி
யாளர்களும் அங்கு வருகைதந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை
நாடு என்ற வகையில் பிரான்ஸின் அதி
பர் மக்ரோன் இந்த விசேட – முறைசாரா-
மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். மாநாட்
டை ஒட்டி பாரிஸ் வெற்றி வளைவில்(Arc de Triomphe) ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

103 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உல
கப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த
சமாதான உடன்படிக்கை பாரிஸ் சத்தோ து வேர்சாய் (château de Versailles) அரண்
மனையிலேயே கைச்சாத்திடப்பட்டது.
2017 இல் மக்ரோன் அதிபராகப் பதவி
யேற்ற பிறகு-15 நாட்களில் – முதல்
உலகத் தலைவராக ரஷ்ய அதிபர் புடினை அழைத்துத் தனது முதலாவது அரசியல் சந்திப்பை நடத்திய இடமும் இந்த அரண்மனைதான்.

அதே அரண்மனையில் இன்றும் (வியாழன்) , நாளையும் (வெள்ளி) இரு தினங்கள் நடக்கின்ற மாநாட்டில் சமா
தான உடன்படிக்கை எதுவும் கிடையாது. அதிபர் புடினும் அழைக்கப்படவில்லை. ஆனால் மாநாட்டுத் தீர்மானங்கள் ஒரு போரை எதிர்கொள்வதில் ஐரோப்பாவின் ஒற்றுமை எந்த அளவில் உள்ளது என்ப
தைப் பிரதிபலிக்கவுள்ளதுடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் அது முக்கிய செய்திகளை வெளியிடக்கூடும்.

         -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                   10-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here