
உக்ரைன் போர் காரணமாக உலகம் எதிர்கொண்டுள்ள பெரும் எரிபொருள் நெருக்கடியை 1973 ஆம் ஆண்டின்”எண்
ணெய் அதிர்ச்சி”(Oil shock of 1973) என்கி
ன்ற பாரிய பொருளாதார நெருக்கடியு
டன் ஒப்பிட்டிருக்கிறார் பிரான்ஸின் நிதி அமைச்சர் புருனோ லு மேயர் (Bruno Le Maire).
“உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள யுத்
தம் காரணமாகத் தோன்றியுள்ள எரி
பொருள் நெருக்கடி உலகெங்கும் பண
வீக்கத்தை அதிகரித்துப் பொருளாதாரத்
தேக்க நிலையை உருவாக்கி விடலாம்.
1973 இல் நிகழ்ந்ததுபோன்ற ஒரு பின்ன
டைவு 2022 இல் மறுபடியும் நடப்பதற்கு இடமளித்துவிடக்கூடாது” என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
ரஷ்யாவின் எரிவாயு மற்றும் எண்ணெய்
இறக்குமதியை அமெரிக்காவும் பிரித்தா
னியாவும் நிறுத்தியுள்ளன.ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் எரிசக்தி
களில் தங்கியிராமல் தனித்துவமாகத்
தமக்கான எண்ணெய், எரிபொருளை
தேடுகின்ற வழிமுறைகளை ஆராய்ந்து
வருகின்றன.இவற்றுக்குப் பதிலடியாக ஐரோப்பாவுக்குக் குழாய் மூலம் வழங்கி
வருகின்ற எரிவாயுவை நிறுதிவிடப்போ
வதாக மொஸ்கோ எச்சரிக்கை விடுத்தி
ருக்கிறது. இந்த நெருக்கடியின் தாக்கம்
உலகெங்கும் உணரப்படுகிறது. பெற்
றோல், டீசல், காஸ் விலைகள் மளமள
வென உயர்ந்து செல்கின்றன.
🔴1973 இல் என்ன நடந்தது?
எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது
தொடுத்த “யோம் கிப்பூர்” போரின் (Yom Kippur war) விளைவாக ஏற்பட்ட உலகளா
விய பெற்றோல், டிசல் நெருக்கடியே
“1973 எண்ணெய் அதிர்ச்சி” என அழைக்
கப்படுகிறது.போரில் இஸ்ரேலை ஆதரி
த்த நாடுகள் மீது – குறிப்பாக அமெரிக்கா மீது -சவுதி அரேபியா உட்பட ஒபேக்(OPEC) அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆறு முக்
கிய அரபு நாடுகள் எரிபொருள் தடை விதித்ததன் காரணமாக அமெரிக்காவி
லும் ஐரோப்பாவிலும் பெற்றோல் மற்றும் டிசல் வரலாறு காண்டிராத உச்ச விலை உயர்வைச் சந்தித்தன.சுமார் ஒருவருடம் நீடித்த இந்தத் தடை காரணமாக மத்திய வங்கிகள் கட்டணங்களை அதிகரித்ததன் விளைவாக உலக நாடுகள் பெரும் பண
வீக்கத்தில் சிக்கின.உலகம் பெரும்
பொருளாதாரத் தேக்க நிலையைச்
(stagflation) சந்திக்கநேர்ந்தது.
1967 இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்
பட்ட எகிப்தின் சினாய் குடா (Sinai Penin
sula) மற்றும் ஹோலான் குன்றுப் (Golan Heights) பிரதேசங்களை மீட்பதற்காக
சவுதி, சிரியா, எகிப்து உட்பட அரபுக் கூட்
டணி நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொ
டுத்தன. இஸ்ரேலியர்களது”யோம் கிப்பூர்
என்ற புனித நாளில் போர் ஆரம்பிக்கப்
பட்டதாலேயே அது” யோம் கிப்பூர் யுத்தம்
(Yom Kippur war)என்று அழைக்கப்படுகி
றது. உலக அரசியலிலும் பொருளாதாரத்
திலும் எண்ணெய் ஏற்படுத்திய முதல்
அதிர்ச்சிக்கு (Oil shock of 1973) இந்தப்
போரே காரணமாகியது.சுமார் ஐம்பது
ஆண்டு கழித்து ரஷ்யா – உக்ரைன் போர்
அதேபோன்றதோர் அதிர்வை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
09-03-2022