அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் மசகு எண்ணெய் விலை உயரும்: ரஷ்யா!

0
335

ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300டொலர் வரை விலை உயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.  

ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால், சர்வதேச சந்தையில் அதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவெக் தெரிவித்தார்.  

ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 300டொலருக்கும் மேலாக விலை உயரும் எனத் தெரிவித்த அவர், அதனால் ஐரோப்பிய சந்தையில் ஏற்படும் தாக்கம் ஒரு வருடத்திற்கு இருக்கும் என்றும் கூறினார்.மேலும், அதை ஐரோப்பிய நாடுகளால் ஈடுகட்ட முடியாது என குறிப்பிட்டார். 

ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் மசகு எண்ணெய், எரிவாயு என்பன ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

எனினும், மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிப்பது குறித்து முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here