கடலடி கேபிள்கள் தாக்கப்பட்டால் ஐரோப்பாவில் “இன்ரநெற்” துண்டிக்கும் ஆபத்துண்டா?

0
140

உலகின் கண்டங்கள் இடையே இணை
யம் மற்றும் தொலைத் தொடர்பு வலைப்
பின்னல்களை இணைக்கும் கேபிள்கள் சமுத்திரங்களின் ஆழத்தில் அங்கும் இங்குமாகக் குறுக்கறுத்துச் செல்கின்
றன.

உலகின் 99 சதவீதமான “இன்ரநெற்”
தொடர்பாடல்கள் இந்த நாரிழைக் கேபிள்
களுக்கு (fiber optic cables) ஊடாகவே பரிமாறப்படுகின்றன.சுமார் 420 கேபிள்
கள் 1.3 மில்லியன் கிலோ மீற்றர்கள்
நீளத்துக்கு சமுத்திரங்களின் ஆழத்தில்
நிறுவப்பட்ட பிளாஸ்ரிக் குழாய்கள் வழி
யாக உலகை இணைக்கின்றன.

அணு வல்லரசுகளிடையே அதிகரித்து
வருகின்ற போர் பதற்றம் சக்தி மிக்க
நாடுகளிடையிலான சண்டையில் இந்த
கடலடி நீர்மூழ்கி கேபிள்களை(submarine cables) போரின் இலக்காக மாற்றிவிடு
மா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரஷ்யா தன் மீது மேற்கு நாடுகள் சரமா
ரியாக விதித்துள்ள தடைகளுக்குப் பதி
லடியாக அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான
கடலடி இன்ரநெற் கேபிள்களை இலக்கு
வைத்துத் தாக்கக் கூடும் என்ற ஒர் எதிர்
பார்ப்பு பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தி
யில் உள்ளது. சமீப நாட்களில் இந்த அச்
சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டமை
பற்றி செய்திகளும் வெளிவந்துள்ளன.

இரண்டு இணையக் கேபிள்கள் (trans
atlantic cables) அமைந்துள்ள ஐரிஷ் கடற்
பகுதியில் அண்மையில் நீர்மூழ்கிகள்
சகிதம் ரஷ்யா நடத்திய போர் ஒத்திகை
யின் போது கேபிள்கள் வேவு பார்க்கப்பட்
டன என்ற சந்தேகம் ஐரோப்பிய புலனா
ய்வு சேவைகளிடம் எழுந்திருந்தது.

2014 இல் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிர
மித்தபோது இதுபோன்ற ஒரு துண்டிப்பு
முயற்சியில் ஈடுபட்டது என்று நம்பப்படு
கிறது. அதைவிட விபத்துச் சம்பவத்தால்
2007 இல் வியட்நாம் நாட்டின் இணைய
தொடர்புகள் ஒருவாரம் துண்டிக்கப்பட
நேர்ந்தது. மீன்பிடிப் படகு ஒன்று கேபிள்
களை அறுத்ததன் விளைவாய் இது நடந்
தது. மிக அண்மையில் தொங்கா தீவுக்
கூட்டங்களை (Tonga Islands) எரிமலை வெடிப்புத் தாக்கிய போது கடலடித்தள
கேபிள்கள் சேதமடைந்து உலகுடனான
தொடர்புகள் துண்டித்துப் போயிருந்தன.

ஐரோப்பாவில் மின் துண்டிப்பைப் போன்று ஒரு நொடியில் இன்ரநெற்
சேவைகளைத் துண்டிப்பதற்கு ரஷ்யா
வால் முடியும். அந்த ஆயுதம் குறித்த
அச்சங்கள் உள்ளன என்பதை ஐரோப்
பிய தொலைத்தொடர்பு மற்றும்”இன்ர
நெற்”சேவை வழங்குநர்கள் ஒப்புக்
கொள்கின்றனர். ஆனால் கேபிள்களை
ஓரிடத்தில் மட்டும் தாக்கித் துண்டிப்ப
தன் மூலம் அதனைச் செய்துவிட முடி
யாது.

நீரடித் தாக்குதல்கள் மூலம் கேபிள்கள்
துண்டிக்கப்பட்டால் இணைய சேவை
சீர்குலையும். கணனிகள் முதல் ஸ்மார்ட்
போன்கள் வரை அனைத்தும் செயலிழக்
கும். நமது ஒட்டுமொத்தப் பொருளாதா
ரம் மற்றும் நிதிப்பரிமாற்றங்கள் உட்பட இணையத்தைச் சார்ந்திருக்கும் அனை
த்துமே இருட்டடிப்பைச் சந்திக்கும்.


           -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                    08-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here