பிரான்சில் அனைத்துலக பெண்களின் பேரணியில் அணிவகுத்த தமிழீழப் பெண்கள்!

0
228

பிரான்சில் அனைத்துலக பெண்கள் நாளான இன்று அனைத்துலக பெண்களின் கவனயீர்ப்புப் பேரணி பாரிஸ் நகரில் இடம்பெற்றது.

பாரிஸ் Gare de nord பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி Paris Gambetta நகர் வரை இடம்பெற்றது.

இப்பேரணியில் குர்திஸ்தான் பெண்கள் அமைப்பினருடன் பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பினரும் இணைந்து தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு எழுச்சிகொண்டிருந்தனர்.

இப்பேரணியில் கலந்துகொண்ட தமிழ் பெண்கள் அமைப்பினருக்கும் தமிழீழ மக்களுக்கும் குர்திஸ்தான் மக்களின் சார்பில் ஒலிபெருக்கியில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், தமிழீழ மக்களின் விடுதலைப் பயணத்தில் தமது ஆதரவு எப்போதும் இருக்கும் என அவர்கள் உணர்வு பொங்கத் தெரிவித்திருந்தனர்.

வெளிநாட்டு மக்களுக்கு பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பினரின் பிரெஞ்சு மொழியிலான துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

பல வெளிநாட்டவர்களும் எமது தேசியக் கொடிபற்றியும் தமிழீழ மக்களின் போராட்டம் பற்றியும் கேட்டறிந்துகொண்டனர்.

இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள், பெண்கள் அமைப்பினர், தொழிலாளர் அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிறைவில் குறித்த பேரணியில் கலந்துகொண்ட தமிழர்களுக்கும் குர்திஸ்தான் மக்களுக்கும் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் பேரணி நிறைவடைந்து.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here