டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 22 ஆவதுஆண்டாக 15.08.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது வைலை நகரில். இடம்பெற்றது, முதல்நிகழ்வாக கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவு கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டிகள் இடம்பெற்றன,இதில் ஐரோப்பிய ரீதியாகவும் அணிகள் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்.
16 வயதிற்குற்பட்டோர் பிரிவில்
1 வது இடம் – கிறின்சட் நகரம்
2 வது இடம் – கேர்ணிங் நகரம்
3 வது இடம் – கொப்றோ நகரம்
சிறந்த விளையாட்டு வீரன் – சாரங்கன் சிவநாதன்
சிறந்த பந்து காப்பாளர் – விபுசன் பாலகேசன்
16 வயதிற்கு மேர்பட்டோர் பிரிவில்
1 வது இடம் – டென்மார்க் கேர்ணிங் டென்ராம் கழகமும்
2 வது இடம் – நோர்வே திக்கிட தக்க கழகமும்
3 வது இடம் – கொலன்ட்
சிறந்த விளையாட்டு வீரன் – சோழன் (திகிடதக்க)
சிறந்த பந்து காப்பாளர் – பிரதிப் (டென்ராம்)
கிளித்தட்டு
1 வது இடம் – ஓ௯ஸ் நகரம்
2 வது இடம் – வைலை நகரம் B கழகம்
இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.