அனைத்துலக மகளிர் நாள் மார்ச் 8. முன்னிட்டு பிரான்சில் உள்ள அனைத்து பெண்கள் கட்டமைப்புக்களும் கடந்த 3 ஆம் நாள் முதல் இணையவழிகளிலும், நேரிடையாயகவும் பல சந்திப்புக்களையும் கருத்துக்களையும், போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.
பிரான்சில் உள்ள குர்திஸ்தான் பெண்கள் அமைப்பு அனைத்து பெண்களுக்குமான கருத்துக்களில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ்ப்பெண்கள் அமைப்பினை இணைத்து மாநாடுகளையும், நிகழ்வுகளையும் நடாத்தி பரப்புரையும் செய்து வருகின்றனர்.
06.03.2022 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் மத்தியில் அமைந்துள்ள குர்திஸ்தான் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற பெண்கள் அமைப்பினருடனான சந்திப்பில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் கலையின் ஊடாக தேசியப்பாடலுக்கான நடனமும், தமிழீழ தாயகத்தில் எமது பெண்கள் இன்றுவரை சந்திக்கும் துயரங்களையும், காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் போராட்டம் பற்றியும் தெரியப்படுத்தப்பட்டது.
08.03.2020 பாரிசின் மத்தியில் அனைத்துலக பெண்கள் நாளினை முன்னிட்டு நடைபெறவிருக்கும் பேரணியும் அதில் தமிழீழப் பெண்களும் பங்கெடுக்க பெண்கள் கட்டமைப்புகளால் அழைக்கப்பட்டனர். அதற்கான அழைப்பையும் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் பிரான்சுவாழ் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு