பாரிஸின் அழகிய தெருவிற்கு வந்த ஆட்டு மந்தைகள்,மாட்டு வண்டில்கள்!

0
276

இதுவேறு உலகம்…

பாரிஸின் அழகிய தெரு என்று சொல்
லப்படுகின்ற Champs-Elysées இன்று கிராமங்களின் காட்சிகளால் நிறைந்தது..
ஆயிரக்கணக்கான ஆட்டு மந்தைகள்..
குதிரைகள் மற்றும் கால்நடைகளின்
மலை மேய்ச்சல் நில அணிவகுப்பும் கிராமத்துக்கலைஞர்களது ஆடல் பாடல் களியாட்டங்களும் அந்த தெருவின் வழமையையே மாற்றியிருந்தன.

உலகப் புகழ் கார் கம்பனிகளினது காட்சி
அறைகளும், வாசனைத் திரவியம் முதல் ஆடம்பர அணிகலன்களது வர்த்தக மை
யங்களும் அணியாக அமைந்திருக்கின்ற
தெருவில் மந்தைகளின் இரைச்சலும் மணி ஒசைகளும் குதிரைகள், வண்டில் மாடுகளது குழம்புச் சத்தங்களும் கேட்டுக்
கொண்டிருந்தன.

பல நூறு கிலோ மீற்றர்கள் பயணம்
செய்து வந்த மலை ஆடுகள் உட்பட
சுமார் இரண்டாயிரம் மந்தைகள் இன்
றைய கண்காட்சியில் பங்குகொண்டன.

பாரிஸ் வேர்சாய்யில் கடந்த சனியன்று
ஆரம்பமாகிய சர்வதேச விவசாயக் கண்
காட்சியின் இறுதி நாள் நிகழ்வாக இந்த “Transhumance” என்னும் மந்தை மற்றும்
கால்நடைகளின் பருவகால மேய்ச்சல்
கண்காட்சி நடைபெற்றிருக்கிறது.

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய
நாடோடிகளது பாரம்பரிய மந்தை மேய்ச்
சல் முறைமையே”டிரான்ஸ்ஹுமன்ஸ்”
(Transhumance) எனப்படுகிறது. மந்தை
கள் மற்றும் கால்நடைகளைக் கொழுக்க
வைப்பதற்கும் இனப்பெருக்குவதற்கும்
அவற்றை மலைகளுக்கும் பள்ளத்தாக்கு
களுக்கும் இடையே குளிர் கால மற்றும் கோடைகால மேய்ச்சல் தரவைகளுக்கு இடம்பெயர்த்துவதே இதுவாகும்.

கிராமங்களிலேயே அருகி மறைந்து
கொண்டிருக்கின்ற இந்த மலை நில மந்தை மேய்ப்புப் பாரம்பரியம் உல்லாசப் பயணிகளுக்காக இந்த முறை தலை
நகரின் மையத்தில் கண்காட்சியாக நடத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. தலை
நகரில் கூடிய பல்லாயிரக் கணக்கா
னோர் உக்ரைன் போர்ப் பதற்றத்தை
மறந்து கால்நடைகளோடு மலைவாழ்வை இரசித்து மகிழ்ந்ததைக் காணமுடிந்தது.

       -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                06-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here