திருகோணமலையில் காணாமற்போன மீனவரை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

0
137

trinco-fisher-manதிருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியை பெரியகுளம் சந்தியில் மறித்து மீனவர்கள் சிலர் இன்று (26) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர் ஒருவர் காணாமற்போன சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருகோணமலை புல்மோட்டை வீதியின் போக்குவரத்து காலை முதல் மதியம் வரை முற்றாக தடைப்பட்டது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் சிறு படகு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து இந்த மீனவர் காணாமற்போனதாக திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் காணாமற்போனதாக கூறப்படும் கடற்பரப்பில் 20 இற்கும் மேற்பட்ட படகுகளை ஈடுபடுத்தி தேடுதல் மேற்கொண்டபோதிலும் தகவல் எதுவும் கிடைக்கிவல்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த தேடுதலுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.

காணாமற்போன மீனவன் கடலுக்கு சென்றதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் கடற்றொழிலுக்கு சென்றிருந்ந ஏனைய மீனவர்களிடம் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு காணாமற்போன மீனவர் குறுந்தகவல் அனுப்பியிருந்தவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடற்பரப்பில் இந்த மீனவரை வேறு மீனவர்கள் எவரும் காணவில்லை என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

25 வயதான அழகுராஸா தங்கரூபன் என்ற மீனவரே காணாமற்போயுள்ளார்.

தம்மை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் உடனடியாக விரைந்து காப்பாற்றுமாறும் தெரிவித்து குறித்த மீனவர் காணாமற்போவதற்கு முன்னதாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவ இடத்திற்கு வந்த முதலமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சுறுக்கு வலை பாவிப்பதை உடனடியாக தடை செய்வதாகவும் மற்றும் காணாமல் போன இளைஞன் பற்றி மூன்று நாட்களுக்குள் விபரம் தருவதாகவும் அளித்த வாக்குறுதியுடன ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here