அமெரிக்காவின் வேர்ஜினியாவில் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துரையாடிக் கொண்டிருந்த போதே இரண்டு ஊடகவியலாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரில் ஒருவர் 27 வயதுடைய ஔிப்பதிவாளரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரலையில் கலந்து கொண்ட அதிதி பாதுகாப்பாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.