பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜெனீவாவில் வைத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாமை தொடர்பில் அவர் அங்கு கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் வைத்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேற்று முன்தினம் சந்தித்திருந்தார்.
இதன்போதும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்று தரும்படி பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.