தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 15ம் நாளாக (01/03/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

0
56

(01/03/2022) Benfeld, France மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் Selestat , Issenheim மாநகரசபைகளில் சந்தித்து மனுக்கொடுத்து தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்பட்டது.

மேடுகளில் தொலை தூரம் கடந்து வந்து சந்திப்பிற்கு திட்டமிட்ட நேரத்தில் சமூகமளிக்கமுடியாத நிலைஏற்பட்ட போதும் மாநகர சபை முதல்வர்,  உதவி முதவல்வர்கள்  மேலும் உறுப்பினர்கள் காத்திருந்து மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்று கலந்துரையாடினர்.

 சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  வேண்டும் எனவும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு எனவும் தாங்கள் பிரான்சு நாட்டின் அதிபருக்கும் வெளிநாட்டு அமைச்சிடமும் வலியுறுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. மற்றும் பானங்கள் உபசரித்து மிகவும் கரிசனையோடு கேட்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here