தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
நிஷா பிஸ்வாலிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இம்முறை தேர்தலை அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடத்தியமை தொடர்பில் நன்றி தெரிவித்த நிஷா பிஸ்வால், இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா விருப்பமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சர்வதேசம் மகிழ்ச்சியடையக்கூடிய விதத்தில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.