திருகோணமலை குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கும்புறுபிட்டி தெற்கு, பழைய ஆர்.டி.எஸ். அலுவலக வீதிக்கு அருகில் சடலமொன்று காணப்பட்டதையடுத்து பிரதேசவாசிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குச்சவெளி குருபட்டி பகுதியைச் சேர்ந்த 46 வயதான பாக்கியராசா பாலகுமார் எனவும் தெரியவருகின்றது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் திருகோணமலை நீதவானின் மரண விசாரணைக்கு பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.