வடமராட்சி கிழக்கில் இருவீடுகளை சேதப்படுத்திய வன்முறைக் கும்பல்!

0
340

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் இரண்டு வீடுகள் இனந்தெரியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
இதனால் வீட்டின் சீற், ஜன்னல் கண்ணாடிகள், குளிர்சாதன பெட்டி, வேலி என்பன சேதமடைந்துள்ளன.
இச் சம்மவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மது போதை கும்பல் ஒன்று வீதியில் வெற்று கண்ணாடி போத்தல்களை உடைத்து துண்டங்களாக போடுவதை தட்டிக்கேட்டதன் விளைவாகவே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் கண்ணாடி போத்தல்களை உடைக்க வேண்டாம் என்று குறித்த சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனால் ஆத்திரமுற்ற நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே நேற்று இரவு 8:15 மணியளவில் வாள்களுடன் குறித்த வீடுகளுக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டதுடன், வீட்டு சீற், வேலி என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், குளிர்சாதன பெட்டியும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதியில் கண்ணாடி உடைக்கப்பட்டு விடயம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 25 ஆம் திகதி ஏற்பட்ட முரண்பாட்டில் காயமுற்ற நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மூவருக்கு நீதிமன்றம் ஊடக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நால்வர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீடுகள் உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்கள் சுதந்திரமாக நடமாடி வருவதாகவும் இதனால் குறித்த பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here