தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு ஆண்டுதோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த 2022 இற்கான போட்டிகள் ஆரம்பம்!

0
444

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்து மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளில் 2022 இற்கான போட்டிகள் கரம் , சதுரங்கப் போட்டிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. பாரிசின் புறநகர் பகுதி நந்தியார் பிரதேசத்தில் இன்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடாத்தப்பட்டது. பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கத்துடன் மாவீரர் நினைவு சுமந்து அகவணக்கம் இடம்பெற்றது.

இப்போட்டிகளில் 8 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிச் சிறப்பித்தன. 184 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர். கோவிட் பெரும் தொற்றுக் காரணமாக கடந்த 2 வருடகாலமாக நடைபெறாதிருந்த இப்போட்டிகள் மீண்டும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து இந்த ஆண்டு 2022 இல் அனைத்து விளையாட்டுக்களும் நடைபெற தமிழர் விளையாட்டுத்துறையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது பற்றியும், இன்றைய அரசியல் நிலைப்பாடு, ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ள பதட்ட சூழ்நிலைகளால் ஒவ்வொரு மனங்களிலும் ஏற்பட்டிருக்கும் கேள்விகள், மனச்சஞ்சலங்களில் இருந்து நிச்சயம் எமது மக்கள் விடுபட வேண்டும் என்றும், அதற்கு இங்கு வாழும் சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து அரசியல் முதல் எம்மால் முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களிலும் பங்கெடுக்கவேண்டும் என்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறையின் போட்டி முகாமையாளர் திரு. இராஜலிங்கம் போட்டியாளர்களுக்கும் கழகங்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு போட்டி நடைமுறைகள் விதிமுறைகள் பற்றியும் கூறியிருந்ததோடு இன்றைய போட்டிகளில் நடுவர்களாக கடமையாற்றுகின்றவர்களையும் போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்தும் வைத்திருந்தார். இன்றைய ஆரம்பப் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பங்குபற்றிய கழகங்கள்
95 தமிழர் விளையாட்டுக்கழகம்
நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்
93 தமிழர் விளையாட்டுக்கழகம்
யாழ்டன் விளையாட்டுக்கழகம்
காவலூர் விளையாட்டுக்கழகம்
அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்
94 தமிழர் விளையாட்டுக்கழகம்
வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்.

 (நன்றி - ஊடகப்பிரிவு.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here