சிறிலங்காப் பேரினவாத அரசினால் தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு என முக்கிய அரசியல் மையங்களில் முழங்கிய மனித நேய செயற்பாட்டாளர்களை யேர்மனிய நாட்டு கிளைப்பொறுப்பாளர் வரவேற்றார். மேலும் வாழிட மொழியிலும் தமிழிலுமாக உரைகள் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை (27/02/2022) கால்சூர், யேர்மனி எனும் மாநகரத்தில் நடைபெற இருக்கும் மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு பிரான்சு நாட்டினை அண்மிக்கின்றது.
“ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை
வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது”
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”