ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது!

0
416

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.

இந்நிலையில், இலங்கை தொடர்பான உரையாடல் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்று ஜெனிவாவுக்கு சென்றுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்குப் பதிலளித்து உரையாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here