உக்ரைன் தேசிய நிறங்களில் ஒளிர்கின்றது பாரிஸ் ஈபிள் கோபுரம்!

0
95

அகதிகளைப் பராமரிக்க ஆயத்தம்
செய்யுமாறு மேயர்கள் வேண்டுதல்

உக்ரைனுக்கு ஆதரவையும் ஐக்கியத்
தையும் வெளிப்படுத்தும் வகையில்
பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம் நீலம்-
மஞ்சள் நிறங்களில் ஒளிரவிடப்பட்டுள்
ளது. அதேசமயம் நாடெங்கும் சில பொது
இடங்களிலும் நகரசபைக் கட்டடங்களி
லும் உக்ரைன் நாட்டின் தேசியக் கொடி
கள் பறக்கவிடப்பட்டுள்ளன.

உக்ரைனை எல்லையாகக் கொண்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு இடம்
பெயரத் தொடங்கியுள்ள அகதிகள் அங்
கிருந்து மேற்கு ஐரோப்பா நோக்கிப்
படையெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்
கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் பல்லாயிரக் கணக்கில் உக்ரைன் அகதிகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை நாடுகள் தொடக்கியுள்
ளன.

பிரான்ஸின் நகரசபை முதல்வர்களது
சங்கம் (Association of Mayors of France)
உக்ரைன் அகதிகள் வருகையை எதிர்
பார்த்து முன் ஏற்பாடுகளைச் செய்யுமாறு
நகர சபைகளிடம் வேண்டுகோள் விடுத்
திருக்கிறது. உக்ரைனுக்கு அனுப்புவதற்
காக உணவு மற்றும் அத்தியாவசியப்
பொருள்களைச் சேகரிக்குமாறும் அது
பொதுமக்களிடம் கேட்டிருக்கிறது.

ரஷ்யாவின் தாக்குதல்கள் உச்சக்கட்டத்
தை அடைந்துள்ள நிலையில் உலகின்
பல நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பா
ட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாரிஸ் நகரில் ரிப்பப்ளிக் சதுக்கம் மற்
றும் ரஷ்யத் தூதரகப் பகுதிகளில் போர்எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.
26-02-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here