அவதூறான செய்திகளை வெளியிடுகின்ற தன்னிச்சை ஊடகங்கள் தொடர்பில் வடமாகாண சபையில் தீர்மானம்!

0
155

northern_provincial_councilதன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுகின்றமையால் அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.   வடமாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.     அதன்போது வடமாகாண சபையின் உறுப்பினர் ஜயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிச்சையாக அவதூறான செய்திகளை வெளியிடுகின்றன.

அதனைத் தடுக்கும் நோக்கில்  வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார்.   அதற்கிணங்க சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையினை ஆமோதித்த வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், குறித்த விடயம் தொடர்பாக அவர் சபையில் தெரிவிக்கையில்,    இலங்கையில் உள்ள இணையத்தளங்கள், சில கட்சிகளினாலும், இராணுவ புலனாய்வாளர்களினாலும் நடாத்தப்படுகின்றன.*

இந்த இணையத்தளங்களினால் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டு செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.    எனவேஇ தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சில், இந்த விடயங்களை தெரியப்படுத்தி, தகவல் திணைக்களத்தின் அனுமதியின்றி நடாத்தப்படும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   மேலும் வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேணைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானத்தினால் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here