வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்தது? குறித்த தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை முன்வைத்து மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இன்று வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியபோதே அவர் விநோதமான போராட்டத்தை நடத்தினார்.
இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இதுவரை நிறைவேற்றப்பட்ட சுமார் 200 சபைத் தீர்மானங்களின் தொடர் நிலை என்ன?இ மீள்குடியேற்றப்பட்டு இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாமல் இருக்கும் மக்களுக்கான வீடுகள் கிடைக்க எடுத்த நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகள் உள்ளடங்களாக 12 கேள்விகளை சபையில் முன்வைத்துள்ளார். அதுமட்டுமன்றிஇ குறித்த பன்னிரெண்டு கேள்விகளையும் தனது மேற்சட்டையில் ஒட்டிக் கொண்ட நிலையிலேயே அவர் இன்றைய அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.