உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து நேட்டோ தனது இராணுவ பிரசன்னத்தை முடுக்கி விட்டுள்ளது.
தற்போது நேட்டோ தனது படைகளை ரஷ்ய எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளது. இதனிடையே, தமக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தும் எந்த நாட்டுக்கும் இராணுவ பலத்தைக் காட்ட ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ள நிலையில், போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி, உக்ரைன் பிரதேசத்தை ஆக்கிரமிக்கப் போவதில்லை எனவும், ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ள உக்ரைனில் உள்ளவர்களை நிராயுதபாணியாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உக்ரைன் தலைநகரிலுள்ள மக்கள் ஐரோப்பிய எல்லைக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால், ஐரோப்பாவின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.