உக்ரைனின் விமானக் கட்டமைப்பு முழுவதையும் தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு!

0
271
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் பற்றி எரியும் பகுதி

உக்ரைன் மீது இன்று அதிகாலை போரைத் தொடங்கியது ரஷ்யா. உக்ரைனின் விமானக் கட்டமைப்பு முழுவதையும் தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் விமான தளங்களில் உள்கட்டமைப்பை எடுத்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. உக்ரேனிய விமானத் தளங்களில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பைத் தாக்கியதாகவும், உக்ரைனின் வான் பாதுகாப்பை சீரழித்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

சுஹுயேவில் உள்ள உக்ரைன் வான்படைத் தளம் மீது தாக்குதல்

தலைநகர் கியேவ், இவ்வினோ பிரான்கிவ்ஸ்க், கார்கிவ், கரமடோர்ஸ்க், டினிப்ரோ, மரியுபோல், ஒடேசா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இராணுவ , வான்படை, கடற்படை இலங்குகள் ரஷ்யாவால் குறிவைத்து ஏவுகணைகளால் தாக்கப்பட்டன.

உக்ரேனிய எல்லைப் படைகள் ரஷ்ய பிரிவுகளுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்று அமைச்சகம் மேலும் கூறுகிறது.

தலைநகர் கியேவ் உட்பட பல நகரங்களில் முழுவதும் வான்பாதுகாப்ப எதிர்ப்பு ஆயுதங்களால் அந்நகரமே முழங்குகின்றது.
ரஷ்யாவின் ஏவுவுகணைத் தாக்குதல்களால் வானம் முழுவதும் செம்மஞ்சள் நிறத்தில் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றது.

நிலக்கீழ் தொடருந்து நிலையங்களில் பாதுகாப்பு தேடும் உக்ரைன் மக்கள்.

இராணுவ இலக்குகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின.

உக்ரைனின் கடற்படைத் தளம் , துறைமுகம் அமைந்த மரியுபோல், ஒடேசா கடற்பரப்பில் அனைத்து கப்பல் போக்குவரத்துகள் ரஷ்யாவால் நிறுத்தப்பட்டு முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. எந்த ஒரு வணிகக் கப்பல்களும் அப்பகுதியால் பயணிக்க ரஷ்யா தடை விதித்துள்ளது.

வடக்கு செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகளிலும், கிழக்கு லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளிலும் ரஷ்ய இராணுவ வாகன அணிகள் உக்ரைனுக்குள் நுழைந்ததாக உக்ரைனின் எல்லைக் காவல் சேவை தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் நடத்திய ஒரு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். 19 பேரையும் காணவில்லை தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உக்ரைனின் ரேடார் நிலையம் தாக்கியழிப்பு

உக்ரைன் மீது தனது விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான செய்திகளை அமைச்சகம் மறுத்துள்ளது. 
உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்களும் ஒரு ஹெலிகாப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனின் இராணுவம் முன்னதாக கூறியது.
ஆனாலும் இருதரப்பு கூற்றுக்ளையும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
உக்ரைனில்  இன்று அதிகாலையில் பல வெடிப்புகள் நகரங்களை உலுக்கியது.

எரிபொருள் நிரப்பவும், பாதுகாப்பு இடங்களை நோக்கி நகரும் உக்ரைன் மக்கள்

மக்கள் போர் அச்சம் காரணமாக பண இயந்திரங்களில் பணத்தை எடுக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். 
மரியுபோல் என்ற நகரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பண இயந்திரங்களில் பணத்தை எடுக்கவும், எரிபொருள் எடுக்கவும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, நேட்டோ, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here