உக்ரைன் தலைநகர் கீவில் சைரன் சத்தங்கள்! கிழக்குப் பகுதியில் மோதல் வெடிப்பு!!

0
379

🔴பிந்திய செய்தி :

💥தாக்குதல்கள் ஆரம்பம்!

🔴வெளித் தலையீடுகளுக்கு
மோசமான பதிலடி கிடைக்கும்!!
மேற்குலகிற்கு புடின் மிரட்டல்!!!

உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் தனது படை நடவடிக்கைகளைத் தொடக்
கியிருப்பதாக கிரெம்ளின் அறிவித்திருக்
கிறது. ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படை
கள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளு
க்கு அருகே உள்ள உக்ரைன் படைகளது நிலைகளைத் தாக்கத் தொடங்கியிருக்
கின்றன.

ரஷ்யா அதிபர் அதிகாலை ஆற்றிய
விசேட தொலைக்காட்சி உரையில் உக்
ரைனின் கிழக்கில் உள்ள படையினரை
ஆயுதங்களைக் கைவிட்டுப் பின்வாங்கு
மாறு எச்சரித்திருக்கிறார்.தனது நடவடிக்
கையில் வெளிச் சக்திகள் தலையிட்டால்
வரலாற்றில் சந்தித்திராத பதிலடி கிடைக்
கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்
ளார்.

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகர
மாகிய ஒடிசாவில் ( Black Sea port of Odessa) பெரும் வான் வழித் தரையிறக்
கம் ஒன்றை ரஷ்யா மேற்கொண்டுள்ள
தாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவில் வான் தாக்
குதல் எச்சரிக்கை சைரன் ஒலி எழுப்பப்
படும் சத்தங்களைக் கேட்க முடிவதாக
அங்குள்ள செய்தியாளர்கள் கூறியிருக்
கின்றனர். மக்களை வீடுகளை விட்டு
வெளியேற வேண்டாம் எனத் தலைநகர
நிர்வாகம் கேட்டிருக்கிறது.

உக்ரைன் வான் பரப்பில் பறக்க வேண்
டாம் என்று ஐரோப்பிய வான் சேவைப் பாதுகாப்பு முகவரகம் (European Aviation Safety Agency) விமான சேவைகளுக்கு
அவசர ஆலோசனை வழங்கியிருக்கி
றது.

ரஷ்யா மிக மோசமான எதிர்விளைவுக
ளைச் சந்திக்க நேரிடும் என்று மேற்கு
நாடுகள் எச்சரித்துள்ளன. நேட்டோ நாடு
களது தலைவர்கள் அவசரமாகக் கூடுகின்றனர்.

       -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                24-02-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here