பிரான்சு 93 ஆம் மாவட்டம் பொண்டியில் புதிய முதல்வருடன் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு!

0
261

பிரான்சு தேசத்தின் 93 மாவட்டத்தில் தமிழ்மக்கள் அதிகமாக வாழும் ஒரு மாநகரமான பொண்டி என்னும் பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாநில முதல்வரை பொண்டி பிராங்கோ தமிழ்ச்சங்கம் சந்தித்ததோடு தமது வாழ்த்துதல்களையும் தெரிவித்திருந்தனர். 23.02.2022 காலை 11. 00 மணிக்கு நடைபெற்ற சந்திப்பில் பொண்டி பிராங்கோ தமிழச்சங்கத்தலைவர் திரு. கலைச்செல்வன் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும் சந்தித்திருந்தனர். சந்திப்பில் தேர்தலில் தனக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றியையும் தொடர்ந்தும் இங்கு வாழும் மக்களுக்கு தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவாக தான் இருப்பேன் என்றும், அரசியல் என்றதற்கும் அப்பால் மனிதநேயம் தமிழ்மக்களின் நட்புக்கும் தன்னால் முடிந்த பணியை எப்பவும் செய்யத்தயார இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இங்கு வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு தானும் பங்கு பற்றி பங்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் முதல்வருக்கு ஓர் வரவேற்பு நிகழ்வை பிராங்கோ தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சோலையும்  பொண்டிவாழ் மக்களாலும் செய்ய விரும்புவதாகவும் சங்கத்தலைவர் கேட்டிருந்தார். அதனை சந்தோசத்துடன் விரும்பி அதற்கான நாளையும், நேரத்தை கேட்டிருந்தார். தொடர்ந்தும் அரசியல் என்பதற்கு அப்பால் இங்கு வாழும் எமது மக்களை இனிவரும் காலங்களில் தேசம்நோக்கி தொடர்ந்து நம்பிக்கையோடு வழிநடத்திச் செல்லும் பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here