வடக்கு மாகாணம். கிழக்கு மாகாணம்.தெற்கு மாகாணம். மேற்கு மாகாணம் ஆகிய மாகாணங்களில் உள்ள. கரையோர மாவட்டங்களின் மீனவமக்கள் தமிழ்.சிங்கள.முஸ்லீம்கள் இணைந்து இன்று 23.02.2022 கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன் இந்திய இழுவைமடிக்கு எதிரான போராட்டமும் அதன்பின் அங்கிருந்து பேரணியாகச்சென்ற மீனவ மக்கள் ஜனாதிபதி செயலகம்வரைசென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை அவரின் அலுவலகத்தில் கையளித்தனர். அதன் மீன்பிடி அமைச்சருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. அவரது அலுவலகத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயகக்கமும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையமும் இந்த போராட்டத்தை ஏற்பாடுசெய்தது இந்தப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.