யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூவில் உள்ள வீடொன்றில் வசித்த பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இன்று (22.02.2022) செவ்வாய்க்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்ற பெண்ணே ஜெபம் செய்துகொண்டிருந்த வேளை தலையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிமையில் இருந்தவேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே குறித்த பெண்ணை கோடரியின் பின் புறத்தால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கொலைச் சந்தேகநபர் யாழ்.ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்தவர் எனவும் – அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிழந்த பெண் கணவரை இழந்தவர் எனவும் – இரண்டு பிள்ளைகள் புலம்பெயர் தேசங்களில் வசித்து வருகின்றனர் எனவும்- உறவினர்கள் எரிமலைக்குத் தெரிவித்தனர்.
குறித்த பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு புலம்பெயர் நாடுகளுக்கு வந்து பிள்ளைகளையும் உறவுகளையும் சந்தித்துத் திரும்பியவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.