
நாட்டுப்பற்றாளர்பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை.
யாழ் மாநகரில் வளங்கள் பல நிறைந்த அரியாலையூரில் பரமானந்தர் பார்வதி தம்பதிகளின் ஏகபுதல்வராக முத்தாக மலர்ந்தவர்தான் நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அரியாலை ஸ்ரீ/பார்வதி வித்தியாலையத்திலும், யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலையத்திலும் கல்விபயின்றார். ஆசிரியாராகவும், அதிபராகவும் கடமையாற்றி மாணவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரயைகளாக உருவாக்கியவர். ஏன், எப்படி, எதற்கு என்ற வினாக்களை கிளர்த்தி நிறைவான பதில் கிடைத்தால் மட்டுமே அவற்றைச் சிக்கனப்பற்றிடும் அறிவாளராய் அவர் விளங்கினார்.
பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களில் கூட்டுப்பிராத்தனை, பஞ்சபுராணம் ஒதுதல்,புராணபடனம், திருவாசகம், முற்றோதல், சொற்பொழிவு ஆகிய சிவப்பணிகளில் அயராது ஈடுபட்டு அரும்பணியாற்றியவர். கோவில்கள், சன சமூகநிலையங்கள், திருமுறைமன்றங்கள், இந்துமா மன்றங்கள் ஆகியவற்றில் பல பணிகளை பொறுப்பெடுத்து அதற்கூடக பல சமூக பணிகளை மேற்கொண்டு அவ்வூர் மக்களை நல்வழிப்படுத்தினார்.

வாழ்வில் பெற்றுகொண்ட அனுபவங்களையும் போரட்டத்தின் தேவைகளையும் தனது தனிமனித ஆளுமையால் தான் செயற்படுத்திய அனைத்து தளங்களிலும் ஆதாவது கோவில்களிலும், பாடசாலைகளிலும், மன்றங்களிலும் கொண்டுசென்றோதோடு மட்டுமல்லாது எதிர்கால கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு பாடசாலை நிறைவடந்தவுடன் அவ்வவ் வகுப்புகளுக்காகன இலவசக் கல்வியையும் வழங்கிவந்தார் தனது உடல்நிலை இயலாத நிலையிலும் இறுதிவரை மக்களுக்கான பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அவ்வவ் காலங்களில் மக்களுக்குத் தேவையான போரட்ட அரசியல் தெளிவுகளையும் ஏற்படுத்தி தமிழ் தேசியத்திற்கான போராட்டத்துக்கு அயாரது பாடுப்பட்டுக்கொண்டு வரும் காலத்தில் சுகயீனம் காரணமாக 22.02.2002ல் சாவடைகின்றார். இவரது தேசத்திற்கான தன்னலமற்ற கடமையுணர்வை உணர்ந்துகொண்ட தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளர் என்று மதிப்பளிக்கப்பட்டார்.