தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி  செயற்பாடுகளை மேலும் உத்வேகத்துடன் முன்னெடுப்போம்!

0
148

இன்று உலகத் தாய்மொழி நாள். உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி எங்கள் செம்மொழியாம் தமிழ்மொழி என்ற சிறப்போடும் மிடுக்கோடும் தமிழராய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம். 

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகப்பரப்பெங்கும் சிதறிவாழ்ந்தாலும் தமிழ் என்னும் பெரும்பிணைப்பால் இணைந்திருக்கின்றது எம் இனம். 

புலம்பெயர் வாழ்விலும் தொன்மையறியா எம் தாய்மொழியை இறுகப்பற்றிக்கொண்டு, எம் அடுத்த தலைமுறையிடம் உயிர்ப்போடு கையளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் தமிழ்ச்சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் நன்றிநிறை வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு.
எத்தனை தடைகள் வந்தாலும் தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி எங்கள் செயற்பாடுகளை மேலும் உத்வேகத்துடன் முன்னெடுப்போம் என்று இன்றைய நாளில் உறுதியெடுத்துக்கொள்வோம். தமிழுக்காய் தமிழால் தமிழராய் இணைந்திருந்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here