கடும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்!

0
408

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப் பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து நேற்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை அடைந்தது. கடந்து வரும் பாதைகளில் பிரித்தானிய அனைத்து அரசியற்கட்சிகளுக்கும் பிரதமர் இல்லத்திலும் , நெதர்லாந்து வெளி நாட்டமைச்சு, அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் மற்றும் மாநகரசபைகள் போன்ற முக்கிய அரசியல் மையங்களில் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும் தமிழீழமே நிரந்த தீர்வு என முன்னிறுத்தி தமிழர்களின் வேணவாக்கள் உறுதியாக பதிவு செய்யப்பட்டது.

நேற்று Breda,Netharlands மாநகரசபையின் முன்றலில் எழுச்சிகரமாக தொடர்ந்து கடும் மழை மற்றும் புயல் மத்தியிலும் பெல்சிய நாட்டில் எல்லையினை வந்தடைந்தது. கொட்டும் மழையிலும் பெல்சிய மற்றும் நெதர்லாந்து நாட்டு தமிழ் மக்களின் விடுதலை தாகம் நீங்காத வரவேற்போடு மேலும் அறவழிப்போராட்டம் பெல்சியம் நாட்டில் அன்வேர்ப்பன் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழீழ மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக நிறுவப்பட்ட நினைவுக்கல்லறையினை அடைந்தது.

இன்று 21.02.2022 தமிழீழ மாவீரர் மற்றும் பொதுமக்களின் நினைவுக்கல்லறையில் இருந்து பெல்சியத் தலைநகரான புருசல் மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் கலந்துகொள்ள இருக்கின்றது. சமநேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் , பெல்சிய நாட்டின் வெளிவிவகார அமைச்சிடமும் முக்கிய சந்திப்புக்கள் இடம்பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்சியம் வாழ் தமிழ் உறவுகளே நாளை நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புரிமையோடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்புப் போராட்டம் இடம் : Rond point Robert Schuman , 1000 Bruxelles, Belgique.

நேரம் : 13.00 மணி.

நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here