முல்லையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாடு!

0
110

தமிழ்த் தேசிய மக்கள் முன்
னணியின் 2022ஆம் ஆண்டுக்
கான தேசிய மாநாடு கட்சியின்
தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திர
குமார் பொன்னம்பலம்
தலைமையில் முல்லைத்தீவு
கரைதுறைப்பற்று பிரதேச
சபை கலாசார மண்டபத்தில்
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
“இரண்டு தேசங்கள்
இணைந்த ஒரு நாடு என்ற
அரசியல் தீர்வும், அரசியல்
கைதிகள் அனைவரும் விடு
விக்கப்படவேண்டும், வலிந்து
காணாமல் போகச் செய்யப்பட்
டவர்கள் விவகாரத்தில் சர்வ
தேச பக்கசார்பற்ற விசாரணை
கோரி தொடர்ந்து போராடு
வோம், இன அழிப்பு, போர்
குற்றங்கள் தொடர்பில் முழு
மையான சர்வதேச பக்கசார்
பற்ற விசாரணை வேண்டும்,
போரின் பின்னரும் தொடர்ந்
தும் கட்டமைப்பு சார் இன
அழிப்பு செயல்பாடுகள் தடுத்து
நிறுத்தப்பட வேண்டும், எல்
லைகள் மாற்றி அமைத்து பிர
தேச மட்டத்தில் உள்ள நிர்வாக
அலகுகளுக்கு தமிழர்களை சிறு
பான்மையினர் ஆக்கும் முயற்சி
களை தடுத்து நிறுத்த போராடு
வோம், தமிழ்த் தேசத்தின்
கடல்சார் பொருளாதாரத்தை
பாதுகாப்போம், தமிழர்தேச
வரலாற்றை சிங்களமயமாக்க
முயலும் சதிமுயற்சிகளை முறிய
டித்து செயலாற்ற வேண்டும்.
மலையக மக்களின் உரி
மைகளுக்காக இணைந்து குரல்
கொடுப்போம், கிராமிய
உழைப்பாளர்கள் எதிர்நோக்
கும் சமூகமாற்ற ஒடுக்குமுறை
களுக்கு எதிராக நாமும்
இணைந்து குரல்கொடுப்போம்,
முன்னாள் போராளிகளையும்
மக்களையும் வறுமையில்
இருந்து பாதிப்புக்களில் இருந்
தும் மீட்டெடுக்க உழைப்
போம், சமூகசீரழிவுக்கு எதிராக
போராடுவோம், போதைப்
பொருள் பாவனை மற்றும்

வன்முறை கலாசரத்திற்கு
எதிராகப் போராடுவோம் என
கட்சியின் கொள்கைப்
பிரகடனம் இதன்போது
வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்த்தேசிய
மக்கள் முன்னணியின் பாராளு
மன்ற உறுப்பினர் செ. கஜேந்தி
ரன், கட்சியின் உபதலைவர்
சுரேஷ், கட்சியின் முக்கியஸ்தர்
களான சட்டத்தரணிகள் க.
சுகாஸ், காண்டீபன், உள்ளிட்ட
கட்சியின் முக்கிய உறுப்பினர்
கள் மற்றும் தொண்டர்கள்,
ஆதரவாளர்கள் எனப் பலர்
பங்கேற்றனர்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here