பிரான்ஸ் பாரிஸ் தொடருந்து, பேருந்து சேவைகள் நாளை ஸ்தம்பிக்கும்!

0
332

போக்குவரத்துத் துறை ஊழியர்கள்
ஊதிய உயர்வு கோரி பணி நிறுத்தம்

பாரிஸ் பிராந்தியத்தின் போக்குவரத்து
நிறுவனமான RATP பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி மேற்கொள்ளவிருக்
கின்ற வேலை நிறுத்தம் காரணமாக
வெள்ளிக்கிழமை(பெப்.18) ரயில், பஸ் சேவைகள் ஸ்தம்பிக்கவுள்ளன.

பாரிஸ் நகரின் நிலத்தடி மெற்றோ ரயில்
வலையமைப்பில் எட்டு வழித்தடங்களில்
சேவைகள் முற்றாக நிறுத்தப்படவுள்ளன.
ஏனையவை சேவைக் குறைப்பைச் சந்தி
க்கவுள்ளன.line 2, 3bis, 5, 7bis, 8, 10, 11,12
ஆகிய மெற்றோ வழித்தடங்களிலேயே
ரயில்கள் முற்றாக நிறுத்தப்படவுள்ளன.
ஏனைய மெற்றோ வழித்தடங்களில்
சேவைகள் நெரிசல் நேரமாகிய 6:30 a.m.- 9:30 a.m, பின்னர் 16:30 p.m.-19:30 p.m மாத்
திரமே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்
டுள்ளது. சாரதிகள் இன்றி இயங்கும் 1
மற்றும் 14 ஆம் இலக்க வழித்தடங்களில்
சேவை வழமை போன்று இடம்பெறும்.

RER வெளியிட ரயில்களில் இணைப்பு
A மற்றும் B இரண்டு சேவைகளும் காலை
06.30 மணிமுதல் இரவு 20.30 மணிவரை
மட்டுமே குறைந்த எண்ணிக்கையான ரயில்களுடன் இயங்கும். இந்தக் காலப்
பகுதிக்குப் பிறகு ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

பாரிஸ் பிராந்தியத்தில் பஸ் மற்றும் Tram
சேவைகளும் குறைக்கப்பட்ட எண்ணிக்
கையிலேயே இயங்கும் என்று போக்கு
வரத்து சேவை நிறுவனம் தெரிவித்துள்
ளது.பாரிஸ் பிராந்திய வாசிகள் இரண்டு வார குளிர் கால விடுமுறையைக் கழிப்
பதற்காக வெளியூர்ப் பயணங்களை
ஆரம்பிக்கவுள்ள சமயத்தில் போக்குவரத்
துத் தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணி
நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன.

பணவீக்கம் காரணமாக வாழ்க்கைச் செலவு உயர்ந்திருப்பதைக் காரணம் காட்
டியே போக்குவரத்துப் பணியாளர்கள் சம்பள அதிகரிப்பைக் கோருகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
16-02-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here