வடமராட்சி, வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவத்தின்போது எட்டுஅரை பவுண் தங்க நகை திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை(15) காலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இடம்பற்றது. இத் தேர் உற்சவத்தில் மிக குறைந்த அளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்த போதும் நால்வரின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.