பொலீஸாருக்குக் கத்தி காட்டியவர் Gare du Nord இல் சுடப்பட்டு மரணம்!

0
290

பெரிய கத்தி ஒன்றைக் காட்டிப் பொலீ
ஸாரை அச்சுறுத்திய இளைஞர் ஒருவர் பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

பாரிஸில் தமிழர்களது வர்த்தக மையமா
கிய லா சப்பேல் அருகே அமைந்துள்ள Gare du Nord மத்திய ரயில் நிலையத்தில்
இந்தச் சம்பவம் இன்று காலை ஏழு மணி
யளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்ப
வத்தில் வேறு எவருக்கும் காயம் ஏற்பட
வில்லை. அங்கு பயணிகள் மத்தியில்
சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது

வெளியிடங்களுக்கான பிரதான ரயில் இணைப்புப் பிரிவில் (“grandes lignes”) காணப்பட்ட ஐரோப்பியத் தோற்றமுடைய நபர் ஒருவரே அப்பகுதியில் ரோந்துக்
கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு
பொலீஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்
தினார். பொலீஸார் கத்தியைக் கைவிடு
மாறு அவரிடம் பலதடவைகள் கோரினர். ஆனால் அந்த நபர் தொடர்ந்தும் பொலீ
ஸாரை அச்சுறுத்திய வேளையிலேயே சுடப்பட்டார் என்று பொலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

உயிரிழந்த நபர் 1991 இல் பிறந்தவர்
என்றும் அவர் வைத்திருந்த 30 செ. மீற்
றர் நீளக் கத்தியில் பொலீஸாருக்கு
எதிரான சுலோகம் ஒன்றின் எழுத்துக்
கள் காணப்பட்டன எனவும் ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவித்தது.

ஆபத்தான அந்த நபரால் பயணிகளுக்கு
ஏற்படவிருந்த ஆபத்தைத் தடுத்தமைக்
காக பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு
உள்துறை அமைச்சர் தனது பாராட்டைத்
தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்
தில் பயங்கரவாதச் சாயல் எதுவும் தென்
படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
14-02-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here