பிரான்சு தேசத்தில் 93 மாவட்டத்தில், ஓர் மாநகரமான நியூலிசூர்மாறன் பகுதியில் 13.02.2022 மாநகரமுதல்வருக்கான தேர்தலில் zartoshte BAKHTIARIஅவர்கள் 73.29 வீதமான வாக்குகளைப் பெற்று நியூலிசூர்மாறன் மாநகர முதல்வராகச் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இத்தேர்தல் நடைபெற்றபோதும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் ஒருவருடங்களின் பின் மீண்டும் 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தேர்தலில் முதல்சுற்றிலேயே சென்ற முறையை விட அதிகமான வாக்குகளை zartoshte BAKHTIARIஅவர்கள் வெற்றிபெற்றிருந்தார்.
இவருடைய கட்சியில் இப்பிரதேசத்தில் வாழும் மாணவியும், இளையவருமான செல்வி. மதுமிதா கலாதாசன் அவர்களும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வெற்றிபெற்ற முதல்வர் zartoshte BAKHTIARI அவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கம் நியூலிசூர்மாறன், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவு, மற்றும் தமிழ் மக்கள் தமது வாழ்த்துதல்களை மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசியிலும், நேரிடையாகவும் செய்துவருகின்றனர்