இரா.சம்பந்தனிற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் : விக்கிரமபாகு கருணாரட்ன!

0
219

wickramabahuதேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் மூவின மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இணக்கப்பாட்டுடன் கூடிய நாட்டின் முன்னேற்றத்துக்கான தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.   அந்தவகையில் எமது நாட்டில் பலவருடகாலமாக காணப்படுகின்ற தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மூவின மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்துள்ள இந்நிலையில் சட்ட விதிமுறைகளுக்கமைய நாட்டின் பிரதானமான பலம் பொருந்திய மூன்றாவது கட்சியாக தொழிற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here