இறுதி யுத்த காலத்தில் களத்தில் ஊடகப்பணியின் போது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்த ஊடகப்போராளி நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சில் ஈழமுரசு பணிமனையில் இன்று 12.02.2022 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈழமுரசு இதழின் பிரதம ஆசிரியர் அவர்கள் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் திருஉருவப்படத்திற்கு ஈகைசுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தனது இறுதி மூச்சு வரை உண்மையான ஊடகவியலாளனாக விளங்கியவர். அவர் வெளியிட்ட செய்திகள் புலம்பெயர் மக்களுக்கு மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. எமது ஈழமுரசு இதழுக்கு உடனுக்குடன் உண்மையான காத்திரமான தகவல்களை அவர் வழங்கியிருந்தார். – என்றார்.