உலகளவில் ஒமிக்ரோனால் கடந்த நவம்பர் முதல் இதுவரை 5 இலட்சம் பேர் பலி!

0
273

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 05இலட்சம் பேரை பலிகொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த ஒமிக்ரோன் பெரிதாக பாதிப்பில்லையென்றே கருதி வந்தபோதும், இந்த எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது, 

“கொரோனாவின் திரிபான ஒமிக்ரோன், தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 05இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம். 

கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமிக்ரோன் தொற்று முந்தியுள்ளது. ஒமிக்ரோன் லேசான அறிகுறியை ஏற்படுத்து வதாக தோன்றினாலும், இது மிக வேகமாக பரவக்கூடியது.  திறமையான தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் அரை மில்லியன் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது. ஒமிக்ரோனின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், உண்மையான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும். 

ஒமிக்ரோன் தொற்றை நாம் இன்னும் முழுமையாக கடக்கவில்லை. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று நம்புகிறோம். பல நாடுகள் இன்னும் ஒமிக்ரோனின் தொற்று உச்சத்தை கடக்கவில்லை.  பல வாரங்களாக தொடர்ச்சியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மிகவும் கவலையளிப்பதாக  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here