முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றின் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இளைய பிரபல்யமான ஒருவரை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்க வேண்டுமென தாமும் ஜனாதிபதியும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை அழிவடையச் செய்ய மஹிந்தவிற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.