சிறிலங்கா சுதந்திர தினம் எமக்கு கரிநாளே: மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்!

0
141

சிறிலங்காவின் சுதந்திர தின
மான இன்று வெள்ளிக்கிழமை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்
டவர்களின் உறவுகளாகிய
நாங்கள் சுதந்திர தினத்தை கரி
நாளாக அனுஷ்டிப்பதாக மன்
னார் மாவட்ட வலிந்து காணா
மல் ஆக்கப்பட்ட உறவுகளை
தேடும் குடும்பங்களின் சங்
கத்தின் தலைவி மனுவல் உதயச்
சந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று வியாழக்
கிழமை காலை இடம்பெற்ற
ஊடக சந்திப்பின்போதே அவர்
இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்
கையில்-
பெப்ரவரி மாதம் 4ஆம்
திகதி சிறிலங்கா சுதந்திர தினம்.
வலிந்து காணாமல் ஆக்கப்
பட்டவர்களின் உறவுகளாகிய
நாங்கள் அந்த நாளை கரி
நாளாக அனுஷ்டிக்க இருக்கி
றோம்.
எங்கள் உறவுகளுக்காக
வீதிகளில் நின்று போராட்டங்
கள் செய்து எந்த ஒரு பிரயோ
சனமும் இல்லாத நிலையில்
இந்த சுதந்திர தினத்தில் கரி
நாளாக நாங்கள் முல்லைத்தீவு
மாவட்டத்தின் முள்ளிவாய்க்
கால் முற்றத்தில் இன்று வெள்
ளிக்கிழமை முற்பகல் 10 மணி
யவில் அனுஷ்டிக்க இருக்கி
றோம்.
அதனால் வீதிகளில் நின்று
போராடும் தாய்மார்களுக்கு
வலு சேர்ப்பதற்காக வர்த்தக
சங்கங்கள், பள்ளி மற்றும்
பல்கலைக்கழக மாணவர்கள்,
தனியார் நிறுவனங்கள், அரசி
யல்வாதிகள், சமூக நிறுவனங்
கள், சமூகத் தொண்டர்கள் ,
மனித உரிமை செயற்பாட்டா
ளர்கள், அனைவரும் முள்ளி
வாய்க்கால் முற்றத்தில் எம்
மோடு வந்து நின்று எமக்கு
ஆதரவு தரவேண்டும்.
மேலும் ஒவ்வொரு
மாவட்டமாக நீதியமைச்சர்
வருகை தந்தார். ஆனால் அவர்
நீதி அமைச்சராக வரவில்லை.
நிதியமைச்சர் ஆகவே வந்தார்.
அதனால் சில மாவட்டங்களில்
அவரைச் சந்திப்பதையும் நாங்
கள் தவிர்த்துக்கொண்டோம்.
அவருக்கு தெரியும் நாங்கள்
நிதிக்காகப் போராட வில்லை.
எங்களுடைய உறவுகளுக்காக
போராடுகிறோம் என்று.
அதேபோல் மன்னாருக்கு 13
திணைக்களங்கள் வருவதாக
இருந்து இறுதியில் வந்தது 7
திணைக்களம். அதில் காணா
மற்போனோர் அலுவலகம் மன்
னாருக்கு வந்து 4 வருடங்கள்
ஆகின்றது.
இன்று வரை அது எந்த ஒரு
செயற்பாடுகளையும் செய்ய
வில்லை. அது அரசாங்கத்துக்
கும் தெரியும். இருந்தும் ஜனா
திபதி நீதி அமைச்சரை அனுப்பி
ஒவ்வொரு மக்களாக சந்தித்து
எதிர்வரும் ஜெனிவா
கூட்டத்தொடரில் அரசாங்கத்
துக்கு சாதகமாக மாற்றுவதற்கு
செயல்பட்டு வருவதாக அறிய
முடிகிறது.
எனவே நாங்கள் இங்குள்ள
இலங்கை அரசாங்கத்தை நம்
பவில்லை. எங்களுக்கு சர்வதேச
நீதி வேண்டும். ஆகவே தான் வர
இருக்கின்ற சுதந்திர தின நிகழ்
வின் போது முள்ளிவாய்க் கால்
முற்றத்தில் கரி நாளாக அனுஷ்
டிக்க இருக்கிறோம்-என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here