பிரான்ஸ் மூதாளர் இல்லங்களில் பராமரிப்பில் பெரும் முறைகேடா?

0
288


விசாரணை நடத்த அரசு உத்தரவு

பிரான்ஸில் ஓய்வூதியர்கள் மற்றும் வயோதிபர்களைப் பராமரிக்கின்ற
நலன்காப்பகங்களில் சுகாதாரக் குறை
பாடுகள் மற்றும் முறைகேடுகள் இடம்
பெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்
கிறது.அது தொடர்பில் இரண்டு உள்ளக
விசாரணைகளை நடத்துமாறு அரசு
உத்தரவிட்டிருக்கிறது.

சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் அண்
மையில் வெளியிட்ட நூல் ஒன்றில், மூதா
ளர் தங்ககங்களில் காணப்படுகின்ற பரா
மரிப்புக் குறைபாடுகள் பற்றிய பல ஆதா
ரங்கள் அம்பலமாகியிருந்தன. உணவு,
உடை, மற்றும் சுகாதாரப் பராமரிப்புக
ளில் பெரும் குறைபாடுகள் காணப்படு
வதை அந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்
டியமை நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படு
த்தியது.

“கல்லறை வெட்டுவோர்”(“Les Fossoyeurs”)
என்ற பெயரில் பத்திரிகையாளர் விக்ரர்
காஸ்ரனே (Victor Castanet) வெளியிட்ட
அந்த நூலில், தங்கள் வயோதிபப் பெற்
றோர்களை பராமரிப்புக்காக ஒப்படைத்த
பலர், அவர்கள் அங்கு நடத்தப்படுகின்ற
விதம் குறித்துப் பல சாட்சியங்களை வழ
ங்கியிருக்கின்றனர்.

பராமரிப்பு நிலையங்களில் திரட்டப்பட்ட
புலனாய்வு ஊடகத் தகவல்களை வெளி
யிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டு தனக்கு
பெரும் தொகையை லஞ்சமாக வழங்கு
வதற்கு அந்த நிறுவனம் பேரம் பேசவும் முயற்சித்தது என்ற தகவலை அந்தப் பத்
திரிகையாளர் வெளியிட்டிருக்கிறார்.

பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்
க்கின்ற Orpea என்னும் மூதாளர் பேணும்
நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்ற நூற்
றுக்கணக்கான நிலையங்களிலேயே இவ்வாறு பராமரிப்புக் குறைபாடுகள்
நிலவுவதாக அந்த நூலில் குறிப்பிடப்
பட்டுள்ளது.வருமானத்தை அதிகரிப்ப
தற்காக வயோதிபர்களது பராமரிப்புச்
செலவுகள் குறைக்கப்பட்டு அவர்கள்
கீழ்த்தரமாக நடத்தப்பட்டுவருகின்றனர்
என்று குற்றச் சாட்டுகள் கிளப்பப்பட்டுள்
ளன.

பராமரிப்பு நிலையங்களில் திரட்டப்பட்ட
புலனாய்வு ஊடகத் தகவல்களை வெளி
யிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டு தனக்கு
பெரும் தொகையை லஞ்சமாக வழங்கு
வதற்கு அந்த நிறுவனம் பேரம் பேசவும் முயற்சித்தது என்ற தகவலையும் அந்தப் பத்திரிகையாளர் வெளியிட்டிருக்கிறார்.

முதலில் இந்தக் குற்றச்சாட்டுகளை
மறுத்த Orpea நிறுவனம், பின்னர் அதன்
பிரதான முகாமையாளர் ஒருவரைப்
பதவியில் இருந்து நீக்கியுள்ளது.நிறு
வனத்துக்கு எதிராக அதன் நிதி முகா
மைத்துவம், நிர்வாகம் ஆகிய இரண்டு
பிரிவுகளில் தனித்தனியே இரு விசார
ணைகளை நடத்துமாறு அரசு உத்தரவி
ட்டிருக்கிறது.Orpea நிறுவனம் உலகெங்
கும் சுமார் ஆயிரத்து 200 மூதாளர் பரா
மரிப்பு நிலையங்களை நடத்தி வருகின்
றது. அவற்றில் சுமார் 350 நிலையங்கள் பிரான்ஸில் இயங்குகின்றன.

குமாரதாஸன். 0102-2022
பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here