பிரான்சு நாடு இதுவரை கோவிட்19 இன் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் படி மக்களுக்கு பணிக்கப்பட்டதன் பிரகாரம் பல பொதுநிகழ்வுகள் தடைப்பட்டதுடன் நடாத்த முடியாது போயிருந்தமையும் படிப்படியாக அதன் தளர்வுகள் மக்களை இயல்புவாழ்க்கைக்கு கொண்டு செல்கின்ற நிலையில் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடுதலான தளர்வுகள் அரசினாலும், சுகாதார அமைச்சாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் சென்றவருடம் தடைப்பட்டுப் போன பல தமிழர் விழாக்கள், கலை,விளையாட்டு, கல்வி, அரசியல், மீண்டும் புத்துயிர் பெற்று வழமையான நிலைக்கு திரும்பி வருகின்றன.
கடந்த சனவரி 29, 30ஆம் நாள் தமிழ்மொழி அரையாண்டுத்தேர்வு கடந்த ஆண்டுகள் போன்றே பல்லாயிரம் மாணவர்கள் அனைத்து நாடுகளிலும் பங்குபற்றியிருந்தனர்.
தொடர்ந்து கலைத்தேர்வுகள், மாவீரர் நினைவு சுமந்த அனைத்துப்போட்டிகளும் நடைபெற ஏற்பாடாகின்றன.
எதிர்வரும் 27 ஆம் நாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை மாவீரர் நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகள் நடைபெறவுள்ளதும் அனைத்து வீரர்களை தயாராகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.