பிரான்சில் சிறப்பாக இடம்பெறும் தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு 2021/2022

0
574

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) இன்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமானது.

பிரான்சில் கடந்த ஆண்டு கோவிட் நுண்ணுயிரிப் பெருந்தொற்றுக் கரணியமாக குறித்த தேர்வு முதன்முறையாக இணையவழியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை ஓரளவு சாதகமான நிலையில் தேர்வு நேரடியாக தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் இடம்பெறுகிறது. இடரான நிலையிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.

பிரான்சு ரீதியில் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுகின்றனர் என பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு முன்னோடியாக வருடாந்தம் அரையாண்டுத் தேர்வு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here